12 மற்றும் 10 வது தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்காக கோடைக்கால ஆன்லைன் பாட வகுப்புகளை பிரிட்ஜ் தி கேப்(Bridge The Gap) திட்டத்தின் கீழ் AIMREEDTrust தொடங்கியுள்ளது.
பெயர் குறிப்பிடுவதுபோல், இந்த பாட வகுப்புகள் பள்ளிப்படிப்பை முடித்த மற்றும் கல்லூரியில் சேர ஆவலுடன் காத்திருக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணினி அடிப்படைகளை ஆன்லைன் மூலமாக தன்னார்வலர்களின் உதவியுடன் கற்பத்து அவர்களின் திறன் இடைவெளிகளைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆர்வமுள்ள மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 1 மணிநேரம் வீதம் 2 வாரங்கள் செலவிட வேண்டும். தகுதியுள்ள மாணவர்களை கீழ்க்கண்ட லிங்கில் பதிவு செய்ய ஊக்கப்படுத்துங்கள்.
பாடத்தை கற்பதற்கு நீங்கள் பணம் செலுத்துவதற்கு பதிலாக, நல்ல மதிப்பெண் பெறும் மாணவருக்கு ரொக்கப் பரிசை நாங்கள் வழங்குகிறோம்.
இத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சியின் இறுதியில் நிறைவு சான்றிதழ் வழங்கப்படும்.
நாங்கள் மாணவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பது?
- இணையத்துடன் மொபைல்
- டெஸ்க்டாப் / லேப்டாப் (கணினி அடிப்படைகளில் பயிற்சி செய்ய)
- 1 மணிநேரம் / நாள் செலவிட உறுதி
கற்பித்தல் முறை 100% ஆன்லைன் மற்றும் பெரும்பாலானவை தமிழில் இருக்கும்.
இங்கே பதிவு செய்யவும்
