Hope all you know that 14th October is the Birthday of our missile man who taught us to learn dreaming. On this special day, we wanted to contribute little on one of his vision 2020 (Education).
We decided to give better learning ambience for the Cherangode school located in deep rural area of Nilgiris. This place is surrounded by forest and tea estates. The education is a big dream for the children over there. This is the only one school located in that place and remaining schools are 5 kms away from there.
This school outlook was highly impacted due to recent flood and they haven’t received enough to paint it over 5 years. From aim, we have contributed to paint one block and named it as Dr APJ Abdul Kalam Block and offered to school
Better ambience gives better learning experience!!!
A heartfelted thank you note from CHERANGODE SCHOOL HM
“வானத்தை பாருங்கள் நாம் தனித்து இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது.கனவு காண்பவர்களுக்கும்,உழைப்பவர்களுக்கும் மட்டுமே சிறந்தவற்றை வழங்குகிறது “என்ற கலாமின் வார்த்தைகள் உண்மையென உணர்ந்தேன் இத்தருணத்தில்.சாட்டையில்லா பம்பரமாய் சளைக்காது தொண்டாற்றும் தூரிகை அறக்கட்டளை,AIM REED Trust என்ற இரு கரங்களும் இனிதாய் இணைந்து அன்று முதல் இன்று வரை செய்த உதவிகளுக்கு மூன்றெழுத்தை முன் வைப்பது சற்று கடினம்தான். “கூட்டத்தில் கூடிய நின்று கூடி பிதற்றல் இன்றி நாட்டத்தில் கொள்ளாரடி”என்ற பாரதியின் கூற்று மெய்மையாக இருக்கும் இக் காலத்தில் ” மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என இரவு பகலென பாராமல் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் சற்றும் சளைக்காமல் தொண்டாற்றும் உங்களுக்கு நவில்கிறோம் நன்றிகள் பல. மைல்கள் பல தாண்டி சேவை ஒன்றையே எண்ணமாய் கொண்டு தொண்டாற்றும் இந்த தொண்டு நிறுவனங்களுக்கு நன்றி என்பதை சமர்ப்பணமாய் சமர்ப்பிக்கிறோம் இன்று. வெள்ளத்தால் பாதிப்படைந்த தருவாயில் பதறாமல் மக்களது தேவைகளை பட்டியலிட்டு பகிர்ந்து அளித்த தங்களின் பாங்கு, பல நாள் கனவான எங்களின் தேவையை வண்ணங்களால் வடித்து தந்த எங்கள் பிள்ளைகளின் உள்ளங்களில் வண்ண மழையால் நனைய விட்ட உங்களின் சேவையை வருணிக்க வார்த்தையே இல்லை.ஆண்டொன்றின் மாணவர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து பெற்றோர்கள்யும் மிஞ்சி விட்டீர்கள்.தனியார் பள்ளியும் சற்றே தலை குனியும் அளவிற்கு பட்டமளிப்பு விழாவால் பரவசமடைய செய்தீர்கள்.கலை, இலக்கிய போட்டி வைத்து பரிசுகளை அள்ளி அளித்து ஆனந்த மடைய செய்தீர்கள் அனைத்திற்கும் அன்பான ஆயிரமாயிரம் நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்.நன்றி நன்றி. இத்தனை உதவிகளும் எங்களை அடைய காரணமாக இருந்த ரஞ்சித் சார், ராஜீவ் சார் மற்றும் இங்கு வருகை தந்து இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்.

